ஈரான் எண்ணெய் டேங்கர்கள் மீது, நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ஏறும் அபாயம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு என எல்லாவற்றையும் ஓரத்தில் வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது சந்தை. இன்று சந்தை தனிப்பட்ட பங்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு வந்த நல்ல செய்திகளை வைத்தே ஏற்றம் கண்டு இருக்கிறது.
நாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸை டெக்னிக்கலாக பார்த்தால் 38,200 ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. காரணம் 38,200 என்கிற புள்ளி 150 நாட்களுக்கான மூவிங் ஆவரேஜாக இருக்கிறது. இன்றும் சென்செக்ஸ் இந்த 38,200 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை கடக்காமல் இருப்பதால், வரும் திங்கட்கிழமை ஏற்றம் காண்பது சந்தேகமாகவே இருக்கிறது. அப்படி ஒரு வேளை ஏற்றம் கண்டால் 38,200 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதன் பிறகு அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாகப் பார்த்தோமானால், 38,500 மற்றும் 38,850 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 37,800 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகும் சந்தை சரிந்தால், 37, 600-ஐ அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 37,880 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,994 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,127 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 246 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,257 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,301 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 66 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 35 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,628 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,107 பங்குகள் ஏற்றத்திலும், 1,360 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,628 பங்குகளில் 38 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 272 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா, தனியார் வங்கி தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐடி, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
சிப்லா, வேதாந்தா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஓ என் ஜிசி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இந்தியன் ஆயில், கெயில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.05-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.01 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications