ஒட்டு மொத்த சந்தையை ஏற்றம் காணச் செய்ய தேவையான பொதுச் செய்திகள் வலுவாக இருக்கின்றன. ஆனால் துறை சார்ந்து ஏற்றம் காணக் கூடிய செய்திகள் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நிறுவனம் சார்ந்த கெட்ட செய்திகள், கடந்த சில நாட்களாக அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.
ரானிடிடின் மருந்து தடை காரணமாக ஸ்ட்ரைட்ஸ் பார்மாவின் பங்குகள் தலைகீழாக விழுந்து கொண்டு இருப்பது, லட்சுமி விலாஸ் வங்கி இயக்குநர்கள் மீது புகார் எழுந்ததால் அந்த பங்குகள் தன் சர்க்யூட் விலையைத் தொட்டது, இந்தியா புல்ஸ் மீதான பொது நல வழக்கின் காரணமாக பங்கு விலை மண்ணைக் கவ்விக் கொண்டு இருப்பது என நிறுவனம் சார்ந்த கெட்ட செய்திகளால் சந்தை இறக்கம் கண்டு கொண்டிருப்பதாகவே தெரிகிறது. பற்றாக்குறைக்கு பஞ்சாப் & மகராஷ்டிரா வங்கி பிரச்னையால், ஒட்டு மொத்த வங்கித் துறையிலுமே ஒரு பெரிய தேக்கம் தெரிகிறது.

சரி வரும் திங்கட்கிழமை சென்செக்ஸ் சந்தை, ஏற்றம் காணத் தொடங்கினால் 39,000 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதன் பிறகு 39,500-ஐ வைத்துக் கொள்லலாம். இந்த ரெசிஸ்டென்ஸை தாண்டுவதே பெரிய விஷயம் தான். எனவே முதலில் சென்க்செக்ஸ் இந்த ரெசிஸ்டென்ஸை உடைக்கப்படும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,500 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின் பெரிய அசம்பாவிதங்கள் சந்தையில் நிகழ்ந்தால் 38,500 புள்ளிகளை அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,989 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,003 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,822 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 167 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.இன்று காலை 11,556 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,512 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 58 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 39 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,676 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 978 பங்குகள் ஏற்றத்திலும், 1,546 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,676 பங்குகளில் 59 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 137 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மெட்டல், பார்மா, ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி, மாருதி சுசூகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
வேதாந்தா, ஜி எண்டர்டெயின்மெண்ட், யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.64-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.53 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications