இன்று காலை தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின் சரிவில் என மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இந்திய சந்தைகள், இன்று முடிவிலும் சரிவில் முடிவடைந்துள்ளன.

குறிப்பாக சென்செக்ஸ் 19.69 புள்ளிகள் குறைந்து, 51,309.39 ஆகவும், இதே நிஃப்டி 2.80 புள்ளிகள் குறைந்து, 15,106.50 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. இதற்கிடையில் 1455 பங்குகள் ஏற்றத்திலும், 1454 பங்குகள் சரிவிலும், 161 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் இந்திய ரூபாட்யின் மதிப்பும் 72.84 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இது அதிக ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் சற்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தைகள் எதிரொலி வலுவாக உள்ள நிலையில், சர்வதேச காரணிகள் பலவும், கொரோனா வைரஸ் தாக்கம், தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டாளர்கள் புராபிட் செய்யும் காரணத்தினாலும் சந்தை ஏற்ற இறக்கத்தினை கண்டு, முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.
அதோடு சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் ஊக்கத்தொகை பற்றிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான சென்செக்ஸ் குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், சிப்லா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எம்&எம், ஹெச்டிஎஃப்சி லைஃப், உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, ஈச்சர் மோட்டார்ச், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் பின்செர்வ், எம்&எம், பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.75 - 73.15 ரூபாயாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும் சர்வதேச சந்தைகள் மீண்டு வரும் பட்சத்தில் இந்திய சந்தைகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இது புராபிட் புக்கிங் செய்வதாலும் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications