36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்! 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..!

மும்பை: ரிலையன்ஸ் மரைன் நிறுவனம் திவால் ஆனதால், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் அடி வாங்குவது, திவான் ஹவுசிங் தன் பங்குகளை கடன் பத்திரங்களாக மாற்ற இருக்கும் விஷயத்தால் பங்கு விலை சரிவது, ஓபராய் ரியாலிட்டி நிறுவனத்தின் வருமான வரி சோதனையால் பங்கு விலை சரிவது என எல்லா பயத்தையும் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் சந்தையில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். விளைவு சந்தை 37,000 என்கிற வலுவான சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு போய்விட்டது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் தன் 37,000 லெவல் சப்போர்ட்டை எடுத்து வர்த்தகமானது. ஆனால் இன்று 37,000 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்து முடிந்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு தான், சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019, மே 14, 2019, ஆகஸ்ட் 01, 2019 ஆகிய மூன்று தேதிகளும் வலுவான ட்ரிபிள் பாட்டமாக அமைந்திருப்பதைச் சொன்னோம். மேலே சொன்ன மூன்று தேதிகளுக்கும் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. எனவே நாளையும் இறக்கம் கண்டால் 37,000 புள்ளிகள் முதல் சப்போர்ட்டாகவும், அதன் பின் 36,400 வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்வோம் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே இன்று சென்செக்ஸ் தன் 36,400 புள்ளிகள் சப்போர்ட் எடுத்து இருக்கிறது.

36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்! 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..!

மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 36,000 புள்ளிகள் முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாகவும், 35,710 அடுத்த மிக வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸான 37,000 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அப்படிக் கடந்துவிட்டால், அதன் பின் 37,410 ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.

இன்று காலை சென்செக்ஸ் 37,087 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 36,472 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 587 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,905 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,741 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 177 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 06 பங்குகள் ஏற்றத்திலும், 44 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,597 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 531 பங்குகள் ஏற்றத்திலும், 1,943 பங்குகள் இறக்கத்திலும், 123 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,597 பங்குகளில் 17 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 612 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், அனைத்து துறை சார் இண்டெக்ஸ்கள் பெரிய இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. ரியாலிட்டி, மீடியா, மெட்டல், பொதுத் துறை வங்கிகள் போன்ற துறைகள் கூடுதல் இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், வேதாந்தா, இந்தியா புல்ஸ் ஹவுசிங், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.89-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.73 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+