பலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்..! பெரிய அடி வாங்கிய நிஃப்டி..!

கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பினால் சந்தை இரண்டு வர்த்தக நாளில் சுமார் 3,000 புள்ளிகள் ஏற்றம் கண்டது. ஆனால் கண்ட ஏற்றம் எல்லாம் கூலாங்கற்கள் போல சிதறிக் கொண்டு இருக்கிறது. 39,135 வரை தொட்ட உச்சத்தில் இருந்து, தற்போது சுமாராக 1,450 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.

எதிர்பார்த்த அளவுக்கு ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை, 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி 6.1 சதவிகிதமாகத் தான் இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துச் சொன்னது போன்ற செய்திகளை சந்தை சீரியஸாக எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார் யெஸ் பேங்கின் முதன்மை பொருளாதார வல்லுநர் சுபதா ராவ். இவர் சொல்வது உண்மை தான் போல. இன்று மதியம் சுமார் 12 மணி வரை ஏற்றத்தில் வர்த்தகம் ஆகி வந்த சென்செக்ஸ் ஆர்பிஐ வங்கியின் வட்டி விகித முடிவுகள் வெளியான பின் தொடர்ச்சியாக இறக்கம் காணத் தொடங்கியது.

பலத்த அடி வாங்கிய சென்செக்ஸ்..! பெரிய அடி வாங்கிய நிஃப்டி..!

நேற்று மாலை சென்செக்ஸ் 38,106 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,401 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,673 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 433 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

நேற்று மாலை நிஃப்டி 11,314 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 11,388 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,174 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 139 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 39 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,865 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 976 பங்குகள் ஏற்றத்திலும், 1,636 பங்குகள் இறக்கத்திலும், 253 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,865 பங்குகளில் 39 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 256 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி தவிர அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. பேங்க், தனியார் வங்கிகள், நிதி சேவைகள், மீடியா போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி, பாரத் பெட்ரோலியம், ஹெச் டி எஃப் சி பேங்க், போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஜி எண்டர்டெயின்மெண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட், க்ராசிம், டைடன் கம்பெனி, கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.96-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.05 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+