நடப்பு ஆண்டின் முதல் வர்த்தக நாளே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் புதிய உச்சத்தினை தொட்டன.
இந்த நிலையில் இரண்டாவது வர்த்தக நாளான இன்று காலை அமர்வில் சற்று சரிவினைக் கண்டு, முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், இன்று சற்று சரிவில் தொடங்கி ஏற்றத்தினை கண்டிருப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்பெஷல் FD திட்டங்கள்.. இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பு.. ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி அதிரடி..!

இந்திய சந்தைகள் தொடக்கம் & ஏற்றம்
இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கிய சந்தை, குறிப்பாக சென்செக்ஸ் 183.10 புள்ளிகள் குறைந்து, 47,993.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.90 புள்ளிகள் குறைந்து, 14,076.90 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. ஆனால் முடிவில் சென்செக்ஸ் 260.98 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 48,437.78 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 66.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 14,199 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

நிஃப்டி & சென்செக்ஸ் குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் அனைத்தும் காலை வர்த்தகத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த நிலையில், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மெட்டல்ஸ் 1.36% சரிவிலும், பிஎஸ்இ ஆயில் & கேஸ் 0.33% சரிவிலும் முடிவடைந்துள்ளது. மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, இந்தஸ்இந்த் வங்கி, டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, எம்&எம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.