37328 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்! 11017 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றும் சென்செக்ஸ் தன் வலுவான ரெசிஸ்டென்ஸான 37,410 என்கிற லெவல்களைக் கடக்க முடியாமல் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியான 37,402 புள்ளிகளைக் கடக்க காலையில் இருந்தே முயற்சித்தாலும் சுமாராக மதியம் 01.20 முதல் 02.30 மணி வரை ஏற்றம் கண்டாலும், அந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இறக்கம் கண்டு 37,328 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பே, சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019, மே 14, 2019, ஆகஸ்ட் 01, 2019 ஆகிய மூன்று தேதிகளும் வலுவான ட்ரிபிள் பாட்டமாக அமைந்திருப்பதைச் சொன்னோம். மேலே சொன்ன மூன்று தேதிகளுக்கும் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. எனவே நாளையும் இறக்கம் கண்டால் 37,000 புள்ளிகள் முதல் சப்போர்ட்டாகவும், அதன் பின் 36,400 வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்வோம்.

37328 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்! 11017 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..!

 

வழக்கம் போல 37,410 சென்செக்ஸின் வலுவான ரெசிஸ்டென்ஸ் என மீண்டும் உறுதியாகி இருக்கிறது. ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸான 37,410 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அப்படிக் கடந்துவிட்டால், அதன் பின் 37,750 ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.

இன்று காலை சென்செக்ஸ் 37,441 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,328 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 74 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,063 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,017 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 36 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,583 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 918 பங்குகள் ஏற்றத்திலும், 1,523 பங்குகள் இறக்கத்திலும், 142 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,583 பங்குகளில் 25 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 260 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. எனர்ஜி, மெட்டல், பொதுத் துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற துறைகள் கூடுதல் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆனால் ஆச்சர்யமாக ஆட்டோமொபைல் துறை, ஐடி போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மாருதி சுசூகி, யெஸ் பேங்க், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், பிரிட்டானியா, அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.71-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 59.79 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: sensex closed at 37328 point and nifty closed at 11017

closing bell: sensex closed at 37328 point and nifty closed at 11017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?