இரண்டே நாளில் இறக்கம் கண்ட சென்செக்ஸ்..! ஏற்றம் நிலைக்காத நிஃப்டி..!

மும்பை: கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மேம்படுத்தச் சொன்ன விஷயங்கள், இரண்டு நாட்கள் மட்டுமே சந்தை வர்த்தகத்தை உயர்த்தியது. மூன்றாவது நாளான இன்று முதல் சந்தை வழக்கம் போல தன் இறக்கத்தை காட்டிவிட்டது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் ஆகஸ்ட் 23, 2019 அன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். அதன் பின் தான் ஆகஸ்ட் 26 மற்றும் 27 தேதிகளில் சந்தை ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டது. ஆனால் இன்று அந்த ஏற்றம் நிலைக்கவில்லை. இன்று சென்செக்ஸ் 37,451 என்கிற புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

இரண்டே நாளில் இறக்கம் கண்ட சென்செக்ஸ்..! ஏற்றம் நிலைக்காத நிஃப்டி..!

நேற்றே சந்தையின் வேகம் மிதமாகத் தான் இருந்தது. அதோடு அந்த மிதமான ஏற்றத்தைப் பார்த்தால், நிதி அமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் மொமெண்டம் இல்லாமல் ஒரே நாளில் தொய்வடைந்ததாகத் தான் தெரிகிறது என்பதையும் நேற்றே சொல்லி இருந்தோம். ஆக முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் அரசிடம் இருந்து இன்னும் எதையோ பெரிதாக எதிர் பார்க்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.

இன்று மீண்டும் சென்செக்ஸ் தன் வலுவான 37,410 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளியை இறுக்கமாகப் பிடித்து வர்த்தக நேரத்தைக் கடந்து இருக்கிறது. ஆனால் இன்றைய நாளில் குறைந்த பட்சப் புள்ளியான 37,249 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சென்செக்ஸ் 37,655 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,451 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 189 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,101 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,046 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 59 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 37 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,684 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 933 பங்குகள் ஏற்றத்திலும், 1,608 பங்குகள் இறக்கத்திலும், 143 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,684 பங்குகளில் 38 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 175 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான இண்டெக்ச்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஐடி, ரியாலிட்டி போன்ற துறைகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், மாருதி சுசூகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. ஹெச் சி எல் டெக்னாலஜீச், பாரத் பெட்ரோலியம், இன்ஃபோசிச், டெக் மஹிந்திரா, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், வேதாந்தா, டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், கோல் இந்தியா போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.77-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.04 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+