656 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டி 18,000 கீழாக முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று காலையிலேயே சற்று சரிவில் தொடங்கிய இந்திய சந்தையானது, முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது.

குறிப்பாக சென்செக்ஸ் 656.04 புள்ளிகள் அல்லது 1.08% அதிகரித்து, 60,098.82 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 174.60 புள்ளிகள் அல்லது 0.96% அதிகரித்து, 17,938.40 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..? தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?

இதனையடுத்து 1432 பங்குகள் ஏற்றத்திலும், 1766 பங்குகள் சரிவிலும், 72 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 வெளியேறும் முதலீடுகள்

வெளியேறும் முதலீடுகள்

கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வரும் நிலையில், உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சந்தையானது பெரியளவில் சரிவில் இருந்து தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இந்த போக்கு வரும் நாட்களில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்றைய தொடக்கம்

இன்றைய தொடக்கம்


இன்று காலை தொடக்கத்தில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 287.31 புள்ளிகள் குறைந்து, 60,467.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.20 புள்ளிகள் அதிகரித்து, 18,029.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 952பங்குகள் ஏற்றத்திலும், 1166 பங்குகள் சரிவிலும், 94 பங்குகள் மாற்றாமில்லாமலும் காணப்பட்டது.

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி ஐடி 2% மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இ டெக், பிஎஸ்இ சென்செக்ஸ் 1% மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது. இதே நிப்டி 50, பேங்க் நிப்டி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. மற்றவை மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, எஸ்பிஐ, ஹிண்டால் கோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.யு.எல், கிரசிம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

 சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்டில், ஹெச்.யு.எல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: sensex crashed 656 points, nifty ends below 18,000

closing bell: sensex crashed 656 points, nifty ends below 18,000/ 656 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டி 18,000 கீழாக முடிவு..!
Story first published: Wednesday, January 19, 2022, 17:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X