38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..! 11,300-ல் நிஃப்டி..!

கடந்த செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் சென்செக்ஸ் வாண வேடிக்கை காட்டியது போல சுமார் 3,000 புள்ளிகள் அதிகரித்தது. அதற்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை குறைத்தது தான் காரணம் என நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதற்குப் பின் சொல்லி வைத்தாற் போல தொடர்ந்து சென்செக்ஸுக்கு சரிவு தான். செப்டம்பர் 24, 2019 முதல் அக்டோபர் 09, 2019 வரையான அனைத்து வர்த்தக நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இரண்டு நாள் மட்டுமே சென்செக்ஸ் ஏற்றம் கண்டு இருக்கிறது. செப்டம்பர் 26, 2019 மற்றும் அக்டோபர் 09, 2019 தான் அந்த இரண்டு நாட்கள்.

இன்று முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு சென்செக்ஸ் ஏற்றம் கண்டு இருக்கிறது. ஒருவேளை நாளையும் சென்செக்ஸ் சந்தை, ஏற்றம் காணத் தொடங்கினால் 38,200 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். காரனம் இந்த 38,200 என்பது சென்செக்ஸின் 150 நாள் மூவிங் ஆவரேஜ். அதன் பிறகு அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாகப் பார்த்தோமானால், 38,500 மற்றும் 38,850 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்..!  11,300-ல் நிஃப்டி..!

ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,000 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகும் பெரிய அசம்பாவிதங்கள் சந்தையில் நிகழ்ந்தால் 37,600 மற்றும் 37,410 புள்ளிகளை அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

திங்கட்கிழமை மாலை சென்செக்ஸ் 37,531 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,628 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,177 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 645 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,152 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,313 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 186 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 38 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,698 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1279 பங்குகள் ஏற்றத்திலும், 1,239 பங்குகள் இறக்கத்திலும், 180 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,698 பங்குகளில் 33 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 263 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி தவிர அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அரசு வங்கி, தனியார் வங்கி, நிதி சேவைகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், டைடன் கம்பெனி, ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.97-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 58.91 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+