Market updates: இன்று காலை தொடக்கத்திலேயே தடுமாறிய இந்தீய பங்கு சந்தையானது முடிவிலும் சரிவில் தான் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக சென்செக்ஸ் 520.25 புள்ளிகள் அல்லது 0.86% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டு, 59,910.75 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 121.20 புள்ளிகள் அல்லது 0.68% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டு, 17,706.80 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 1747 பங்குகள் ஏற்றத்திலும், 1739 பங்குகள் சரிவிலும், 180 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 12 பைசா குறைந்து, 81.97 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று 81.85 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

இன்றைய சந்தை ஏற்ற இறக்கத்தின் மத்தியில் நிஃப்டி குறியீட்டில் உள்ள நெஸ்டில், பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ, கோல் இந்தியா, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், என் டி பி சி, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நெஸ்டில், பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், என் டி பி சி, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளது.
குறிப்பாக இன்றைய வர்த்தக அமர்வில் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு கீழாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி வலுவாக தொடர்ந்து 17,700 என்ற லெவலிலேயே காணப்பட்டது.
இன்றைய வர்த்தக அமர்வில் ஐடி குறியீடானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்ஃபோசிஸ் கிட்டதட்ட 10% சரிவினைக் கண்டும், டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவினை கண்டுள்ளன.
இது நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளானது வெளியாகி வரும் நிலையில், பல நிறுவனங்கள் லாபத்தில் இருந்தாலும் மதிப்பீடுகளை எட்டவில்லை. மாறாக மதிப்பீடுகளை விட குறைவாக லாபத்தினை பதிவு செய்வதால் பல பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக ஐடி பங்குகளின் சரிவுக்கு இது முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் அடுத்த 1 - 2 காலாண்டுகளிலும் தாக்கம் இருக்கலாம். அதன் பிறகு மெதுவாக படிப்படியாக மீண்டு வரலாம் என கணித்துள்ளனர். இதற்கிடையில் தான் இன்றைய வர்த்தக அமர்வில் ஐடி பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன.
தொழில்துறை வல்லுனர்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி மெதுவானதாக இருக்கலாம் என நம்பும் நிலையில், இது இரண்டாவது காலாண்டில் மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் என்பது சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருப்பினும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தொழில் துறையானது சிறப்பாக செயல்படலாம் என கணித்துள்ளனர்.
தற்போது நிலவி வரும் மந்த நிலையானது இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என்றாலும், கொரோனாவுக்கு பிறகு நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியினை கண்டு கொண்டுள்ளன. ஆக விரைவில் அவை வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம். ஒப்பந்தங்கள் தற்போது முந்தைய காலாண்டுகளை காட்டிலும் சற்று குறைந்திருந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐடி துறையின் வருமானம் என்பது அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், அடுத்து வரும் சில காலாண்டுகளுக்கு ஒப்பந்தங்கள் குறையலாம். இது நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆர்டரில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அதேசமயம் சீனாவில் வளர்ச்சி மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் மத்திய அரசு பி எல் ஐ திட்டத்தின் மூலம் அன்னிய முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றது. இது உள்நாட்டு முதலீடுகளையும் ஊக்குவிக்கிறது. இது சேவை துறையை மட்டுமல்ல, உற்பத்தி துறை ஏற்றுமதியினையும் ஊக்குவிக்கலாம்.
எப்படியிருப்பினும் தொடர்ந்து உச்சத்தில் காணப்படும் கச்சா எண்ணெய் விலையானது, மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் சந்தையில் தாக்கம் என்பது உள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications