2ம் கட்ட உக்ரைன் போர் தொடக்கம்.. 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது வாரத் தொடக்கத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று 1400 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளில் 700 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்ட சந்தையானது, முடிவில் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளது.

முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையானது உச்சம் தொட்டு வந்த நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் செய்திருக்கலாம். இன்று காலை முதல் கொண்டே அதிக ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில், முடிவில் பலத்த சரிவிலேயே முடிவடைந்துள்ளது.

 தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 269.23 புள்ளிகள் அல்லது 0.47% அதிகரித்து, 57,435.97 புள்ளிகளாகவும், நிஃப்டி 92.80 புள்ளிகள் அதிகரித்து, 17,266.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1687 பங்குகள் ஏற்றத்திலும், 328 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 முடிவில் எப்படி?

முடிவில் எப்படி?

இடையில் ஏற்ற இறக்கத்தினை கண்ட சென்செக்ஸ், முடிவில் 703.59 புள்ளிகள் அல்லது 1.23% குறைந்து, 56,463.15 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 215 புள்ளிகள் அல்லது 1.25% புள்ளிகள் குறைந்து, 16,958.70 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 1111 பங்குகள் ஏற்றத்திலும், 2216 பங்குகள் சரிவிலும், 118 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ்,நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ டெக், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, நிஃப்டி ஐடி, உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவிலும், நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள அப்பல்லோ ஹாஸ்பிட்டல், கோல் இந்தியா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்,ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாடா கன்சியூமர் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

இன்று காலை முதல் கொண்டே பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்ட சந்தையானது கடைசி ஒரு மணி நேரத்தில் என்னவாயிற்று? ஏன் இந்த திடீர் சரிவு? இது ரஷ்யா - உக்ரைனுக்கு இடையே 2ம் கட்ட போர் தொடங்கியுள்ளது என உக்ரைன் அதிபர் அவையின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் கூறியுள்ளார். இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+