ரூ.3.5 லட்சம் கோடி அவுட்.. சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே பெரியளவில் மாற்றமின்றி கீழாக காணப்பட்டது.இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 263.92 புள்ளிகள் அல்லது 0.43% குறைந்து, 60,408.80 புள்ளிகளாகவும், நிஃப்டி 67.70 புள்ளிகள் அல்லது 0.38% குறைந்து, 17,759 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 689 பங்குகள் ஏற்றத்திலும், 1196 பங்குகள் சரிவிலும், 93 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

ரூபாய் மதிப்பு?

ரூபாய் மதிப்பு?

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 82.85 ரூபாயாக கீழாக முடிவடைந்தது. இது கடந்த அமர்வில் 82.79 ரூபாயாக இருந்தது. இது இந்திய பங்கு சந்தையானது அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், ரூபாயின் மதிப்பும் கடும் சரிவில் காணப்பட்டது. அன்னிய முதலீடுகளின் வரத்தும் குறைவாக இருந்த நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முடிவில் எப்படி?

முடிவில் எப்படி?

இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சரிவில் தொடங்கியிருந்த நிலையில், முடிவில் சென்செக்ஸ் 927.74 புள்ளிகள் அல்லது 1.53% குறைந்து, 59,744.98 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 272.4 புள்ளிகள் அல்லது 1.53% குறைந்து, 17,554.30 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 1111 பங்குகள் ஏற்றத்திலும், 2216 பங்குகள் சரிவிலும், 118 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது. இன்று அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் முடிவடைந்துள்ளது. இதில் பிஎஸ்இ-யில் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகளும் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐடிசி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், கிரசிம், பஜாஜ் பைனான்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

3.5 லட்சம் கோடி இழப்பு

3.5 லட்சம் கோடி இழப்பு

தொடர்ந்து கடந்த 4 அமர்வுகளாகவே இந்திய சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் 3.54 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளனர்.

இது சர்வதேச பொருளாதார தரவுகள், அரசியல் பிரச்சனைகள், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, சர்வதேச பங்கு சந்தைகள் சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவில் காணப்பட்டது. இது அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி முதல் ஆர்பிஐ வரையில் அடுத்து என்ன செய்ய போகின்றன என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றன.

சர்வதேச சந்தைகள் நிலவரம்?

சர்வதேச சந்தைகள் நிலவரம்?

சர்வதேச சந்தைகள் பலவும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்பட்டது. இது ஐரோப்பிய சந்தை 1% மேலாகவும், எஸ்&பி 500 ப்யூச்சர்ஸ் சற்று சரிவிலும், நாஸ்டாக் 100 ப்யூச்சர்ஸ் சற்று சரிவிலும்., டவ் ஜோன்ஸ் 0.1% சரிவிலும், MSCI ஆசிய பசிபிக் இன்டெக்ஸ் 1.3% சரிவிலும், MSCI எமர்ஜிங் மார்கெட்ஸ் இன்டெக்ஸ் 1.3% சரிவிலும் காணப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+