938 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டி 14,000 கீழ் முடிவு..!

இன்று காலையில் தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவிலும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

இது நாளை எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை தக்க வைத்துக் கொள்ள ப்ராஃபிட் புக் செய்த நிலையில், இன்று சந்தை பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 937.66 புள்ளிகள் சரிந்து, 47,409.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி கிட்டதட்ட 25 சரிந்து, 13,967.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு எவ்வளவு?

ரூபாய் மதிப்பு எவ்வளவு?

இதற்கிடையில் இன்று 1053 பங்குகள் ஏற்றத்திலும், 1809 பங்குகள் சரிவிலும், 141 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. அதொடு நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 72.92 ரூபாயாக காணப்படுகிறது. இது உள்நாட்டு சந்தையில் ப்ராஃபிட் புக்கிக் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் டெக் மகேந்திரா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், விப்ரோ, ஐடிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், கெயில், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் டெக் மகேந்திரா, ஐடிசி, பவர் கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் நிறுவனம், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாக்டர் ரெட்டி லேபாரட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இன்னும் சில தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பல துறைகளுக்கும் பெரும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக கொரோனா பாதிப்பின் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள பொருளாதாரத்தின் மத்தியில், இந்த பட்ஜெட் மீதான பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. அதே சமயம் அரசின் நிதிபற்றாக்குறையானது விரிவடைந்துள்ள நிலையில், இதனை எப்படி அரசு எதிர்கொள்ள போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இதன் எதிரொலியும்
சந்தையில் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+