Closing bell.. சென்செக்ஸ் 186 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 15,800க்கு கீழ் முடிவு..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், முடிவில் சரிவிலேயே முடிவடைந்துள்ளன.

Closing bell.. சென்செக்ஸ் 186 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 15,800க்கு கீழ் முடிவு..!

குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 186 புள்ளிகள் குறைந்து, 52,549.66 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 66 புள்ளிகள் குறைந்து 15,748.50 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1440 பங்குகள் ஏற்றத்திலும், 1536 பங்குகள் சரிவிலும், 87 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 74.23 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகமாக இருந்ததாலும், புதிய வகை கொரோனா பற்றிய அச்சம் மத்தியில் சரிவில் காணப்பட்டது.

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.

இதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், சிப்லா, ஹெச்.யு.எல். என்.டி.பி.சி, டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐஓசி, ஓ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, கோல் இந்தியா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் பவர் கிரிட் கார்ப், ஹெச்.யு.எல், என்.டி.பி.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், நெஸ்டில் டாப் கெயினராகவும், இதே இதே ஐஓசி, ஓ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, கோல் இந்தியா, கோடக் மகேந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், புதிய வகை கொரோனா என்பது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதொடு சென்செக்ஸ் நிஃப்டி சமீபத்திய அமர்களில் நல்ல ஏற்றம் கண்ட நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதனால் சந்தையில் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+