நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கி, முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சற்று ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
பல சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமான உள்ள நிலையில், கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. எனினும் கொரோனா தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இந்திய சந்தைகள் முடிவு
குறிப்பாக இன்று காலையில் தொடக்கத்திலேயே சந்தைகள் சற்று சாதகமாக ஏற்றத்தில் தான் காணப்பட்டன. இந்நிலையில் முடிவிலும் ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 272.21 புள்ளிகள் அதிகரித்து, 48,949.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 106.90 புள்ளிகள் அதிகரித்து, 14,724.80 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், யுபிஎல், எண்டிபிசி, பஜாஜ் பின்செர்வ், ஒ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ பவர் கிரிட் கார்ப், ஒ.என்.ஜி.சி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலையில் 73.86 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவில் சுமார் 73.75 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
நாளை வார இறுதி வர்த்தக அமர்வு என்பதால், மீடியம் டெர்ம் மற்றும் ஷார்ட் டெர்ம் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்யலாம். ஆக நாளை சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications