நடப்பு வாரத்தில் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, தொடக்கத்திலேயே இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்பட்டன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை கொடுத்தது.
இதனையடுத்து தற்போது முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 254.03 புள்ளிகள் அதிகரித்து, 51,279.51 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 76.40 புள்ளிகள் அதிகரித்து, 15,174.80 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1609 பங்குகள் ஏற்றத்திலும், 1322 பங்குகள் சரிவிலும், இதே 170 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்பட்டன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஓஎன்ஜிசி, ஐஓசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, ஐடிசி, கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமின்றி 72.91 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 72.96 ரூபாயாக தொடங்கியது. இது முந்தைய அமர்வில் 72.93 ஆக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி இன்னும் 15,250 என்ற புள்ளிகளுக்கு கீழேயே வர்த்தகமாகிக் கொண்டுள்ளது. இது இன்னும் 14,900 புள்ளிகளை தொடலாம். 15,250 என்பது முக்கிய லெவலாக பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தைகள் சற்று குறைந்து முடிவடைந்துள்ளது. ஏனெனில் இன்று காலை நேர வர்த்தக அமர்வில் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டு இருந்த நிலையில் அது முடிவில் 250 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இது அதிகரித்து வரும் பத்திர லாபத்தின் மத்தியில், பணவீக்கம் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது. இதனால் சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications