2வது நாளாகவும் சென்செக்ஸ் கிட்டதட்ட 400 புள்ளிகள் வீழ்ச்சி.. என்ன காரணம்..!

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 379.14 புள்ளிகள் குறைந்து, 51,324.69 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 89.95 புள்ளிகள் குறைந்து, 15,118.95 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

 2வது நாளாகவும் சென்செக்ஸ் கிட்டதட்ட 400 புள்ளிகள் வீழ்ச்சி.. என்ன காரணம்..!

இதற்கிடையில் 1609 பங்குகள் ஏற்றத்திலும், 1306 பங்குகள் சரிவிலும், 151 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.

சர்வதேச அளவில் நிலவி வரும் பலவீனமான காரணிகளுக்கு மத்தியில், ஆசிய சந்தைகள் சரிவில் உள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவு காணப்படுகின்றது.

இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், ஸ்மால் கேப், மெட்டல்ஸ், ஆயில்ஸ் & கேஸ், டெக், பிஎஸ்இ உள்ளளிட்ட குறியீடுகள் தவிர பெரும்பாலான குறியீடுகள் சரிவில் முடிவடைந்துள்ளன.

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, கெயில், பிபிசிஎல், ஐஓசி, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், நெஸ்டில், எம் & எம், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திராம் பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா, எம் & எம், நெஸ்டில், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

பலவீனமான சர்வதேச காரணிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் சந்தையானது சரிவில் உள்ளது. அதோடு மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும் கிடைத்த லாபத்தினை புக் செய்து வருகின்றனர். இதனால் சந்தை இரண்டாவது நாளாகவே பலத்த சரிவில் முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+