இன்று காலை தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கிய சந்தை பின் ஏற்றத்தினைக் கண்டது. எனினும் அந்த ஏற்றம் முழுவதும் நிலைக்கவில்லை என்றே கூறலாம்.
இது வார இறுதி என்பதால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம். இதன் காரணமாக சந்தை சரிவினைக் கண்டு பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்துள்ளது.

குறிப்பாக சென்செக்ஸ் 12.78 புள்ளிகள் அதிகரித்து, 51,544.30 ஆகவும், இதே நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 15,163.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1400 பங்குகள் ஏற்றத்திலும், 1520 பங்குகள் சரிவிலும், 159 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்து, 72.75 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இது அதிக ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் சற்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச காரணிகள் பலவும், கொரோனா வைரஸ் தாக்கம், தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டாளர்கள் புராபிட் செய்யும் காரணத்தினாலும் சந்தை ஏற்ற இறக்கத்தினை கண்டு, முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.
அதோடு சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் ஊக்கத்தொகை பற்றிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்களது முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான சென்செக்ஸ் குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, கெயில், சன் பார்மா, ஒஎன்ஜிசி, கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி. எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, சன் பார்மா, ஒஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications