நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையில் சரிவில் தொடங்கி, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 514.56 புள்ளிகள் அதிகரித்து, 51,937.44 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 147.15 புள்ளிகள் அதிகரித்து 15,582 ஆக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1717 பங்குகள் ஏற்றத்திலும், 1449 பங்குகள் சரிவிலும், 187 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து 72.62 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் பையிங்க் பிரஷர் அதிகமாக இருந்ததாலும், இன்று ஜிடிபி மதிப்பீடுகள் குறித்த வெளியீடுகள் வெளியாகவுள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு சற்றே சரிவில் முடிவடைந்துள்ளன.
இன்டெக்ஸ்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. மற்றவை அனைத்தும் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பி.எஸ்.இ மெட்டல்ஸ், பி.எஸ்.இ ஆயில் & கேஸ், பி.எஸ்.இ எஃப் எம் சி ஜி குறியீடுகள் பச்சை நிறத்தில் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
இதனையடுத்து நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், லார்சன், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், இன்ஃபோசிஸ், லார்சன், இந்தஸிந்த் வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications