நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையில் சற்று ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
முதல் வர்த்தக நாளே முதலீட்டாளார்களை குஷிப்படுத்தும் விதமாக சந்தை சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.46 புள்ளிகள் அதிகரித்து, 52,328.51 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 81.40 புள்ளிகள் அதிகரித்து 15,751.70 ஆக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 2,284 பங்குகள் ஏற்றத்திலும், 961 பங்குகள் சரிவிலும், 156 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதனையடுத்து இந்திய சந்தைகள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 19 பைசா அதிகரித்து, 72.84 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் பையிங்க் பிரஷர் அதிகம் உள்ள நிலையில், முந்தைய அமர்வில் 73 ரூபாயாகவும் முடிவடைந்திருந்தது.
இன்டெக்ஸ்கள்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பி.எஸ். இ மெட்டல்ஸ் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பி.எஸ்.இ ஸ்மால் கேப், பி.எஸ்.இ ஆயில் & கேஸ், நிஃப்டி பி.எஸ்.இ உள்ளிட்ட குறியீடுகள் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
இதனையடுத்து நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பிசெர்வ், ஹெச்.டி.எஃப்.சி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பிசெர்வ், ஹெச்.டி.எஃப்.சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications