வரலாற்றில் முதல் முறையாக 53,000 மேல் முடிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் சரிவில் தொடங்கி, பின் ஏற்றத்தினை கண்டு, முடிவில் வரலாற்று உச்சத்தில் முடிவடைந்துள்ளது.

இன்று காலையில் இருந்தே சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த நிலையில், முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் என்றே கூறலாம்.

இன்று காலை தொடக்கத்தில் இருந்தே அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், ரூபாயின் மதிப்பும் சரிவில் முடிவடைந்துள்ளது.

முடிவில் எப்படி?

முடிவில் எப்படி?

எனினும் முடிவில் சென்செக்ஸ் 193.58 புள்ளிகள் அதிகரித்து, 53,054.76 புள்ளிகளாக வரலாற்று உச்சத்தில் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 61.40 புள்ளிகள் அதிகரித்து, 15,879.65 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 1,737 பங்குகள் ஏற்றத்திலும், 1,372 பங்குகள் சரிவிலும், 136 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர, மற்றவை பச்சை நிறத்தில் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் டாடா ஸ்டீல், ஜே.எஸ். டபள்யூ ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், ஹிண்டால்கோ, யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், ஓ.என்.ஜி.சி, மாருதி சுசூகி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், இந்தஸிந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், மாருதி சுசூகி, ரிலையன்ஸ், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.61 ரூபாயாக சரிந்து முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 74.60 ரூபாயாக தொடங்கியது கவனிக்கதக்கது. இதே முந்தைய அமர்வில் 72.90 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இன்று காலை தொடக்கத்தில் இருந்தே அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், ரூபாயின் மதிப்பும் சரிவில் முடிவடைந்ததுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+