முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 600 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன தெரியுமா?

இந்திய பங்கு சந்தையானது இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வலுவான ஏற்றத்தினை கண்டுள்ளது. இதில் சென்செக்ஸ் 600.42 புள்ளிகள் அல்லது 0.995 அதிகரித்து, 61,032.26 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.

இதில் 1252 பங்குகள் ஏற்றம் கண்டும், 2158 பங்குகள் சரிவினைக் கண்டும், 114 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.

இதே நிப்டி 151.95 புள்ளிகள் அல்லது 0.86% அதிகரித்து, 17,922.85 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. பேங்க் நிஃப்டி 334.80 புள்ளிகள் அதிகரித்து, 41,617 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பங்கு சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டாலும், ரூபாயானது சரிவில் காணப்படுகின்றது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 82.76 ரூபாயாக சற்று குறைந்து முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 82.72 ரூபாயாக முடிவுற்று காணப்பட்டது.

இதற்கிடையில் நிபுணர்கள் ரூபாயின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆனது 82.90 ரூபாயாகவும், முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 82.40 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

இன்டெக்ஸ் நிலவரம் எப்படி?

இன்டெக்ஸ் நிலவரம் எப்படி?

இன்றைய வர்த்தக அமர்வில் சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்தாலும், பல குறியீடுகள் சரிவில் காணப்பட்டது. இதில் நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஐடி, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்திலும் முடிவடைந்துள்ளன.

நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும் முடிவடைந்துள்ளன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஐடிசி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், ஈச்சர் மோட்டார்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பிபிசிஎல், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் ஐடிசி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே என்.டி.பி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன், சன் பார்மா, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இன்று பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சாதகமாக வெளியாகியுள்ளன. இது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகின்றது. மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவு, அன்னிய முதலீடுகள் வரத்து என பலவும் சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவும் இன்று பார்க்கப்பட்டது.

பணவீக்கம்

பணவீக்கம்

நிபுணர்கள் பலரும் வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்க தரவு என்பது சந்தைக்கு சாதகமாக வரலாம். பணவீக்கம் என்பது முந்தைய மாதங்களை காட்டிலும் குறையலாம். இது வட்டி அதிகரிப்பினை மெதுவாக்கலாம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. ஆக இதுவும் இந்திய சந்தைக்கு சாதகமான ஒரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதற்கிடையில் சர்வதேச சந்தைகளும் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இது இந்திய சந்தையும் ஏற்றத்தினை காண வழிவகுத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச நாடுகளின் பொருளாதாரமும் மேம்பட்டு வரும் நிலையில், இது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என்பதும் சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+