கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே இந்திய சந்தைகள் புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளன.
அமெரிக்காவின் பங்கு சந்தைகள் உச்சத்தினை எட்டிய நிலையில், ஆசிய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டன.
இதற்கிடையில் இன்று சந்தையின் தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 285.67 புள்ளிகள் அதிகரித்து, 48,459.73 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 83.70 புள்ளிகள் அதிகரித்து, 14,230 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது.
இந்திய சந்தைகள் முடிவில் சரிவு
ஆனால் முடிவில் சென்செக்ஸ் 80.74 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 48,093 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8.90 புள்ளிகள் குறைந்து, 14,137 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இதற்கிடையில் நிஃப்டி 50, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஹெல்த் கேர், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவிலும், மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஹெச்யுஎல், டிவிஸ் லேப், டைட்டன் நிருவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பின்செர்வ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், நெஸ்டில். ஹெச்யுஎல், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ஏற்றத்தில் சில பங்குகள்
ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெஸ்டி எஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, அல்ட் ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட 430 பங்குகள் 52 வார உச்சத்தில் உள்ளன. குறிப்பாக Intellect Design Arena, Welspun India, Jaiprakash Associates, Satin Creditcare Network and Majesco பங்குகள் பிஎஸ் இ-யில் அப்பர் சர்கியூட் ஆகியுள்ளன.


Click it and Unblock the Notifications