நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 84.45 புள்ளிகள் அதிகரித்து, 49,746.21 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 54.75 புள்ளிகள் அதிகரித்து, 14,873.80 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1846 பங்குகள் ஏற்றத்திலும், 1022 பங்குகள் சரிவிலும், 157 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 5 பைசா சரிந்து, 74.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து, 74.40 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் 74.55 ரூபாயாக முடிவடைந்தது. இது 74.19 - 74.96 ரூபாய்க்குள் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, சன் பார்மா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் நிறுவனம், டெக் மகேந்திரா, நெஸ்டில், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்
இன்று இந்திய சந்தையினை பொறுத்த வரையில் பல்வேறு சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக இருந்தன. அதோடு பொருளாதார மீட்சிக்கு சாதகமாக உள்ள நிலையில், நேற்று நடந்த மானிட்டரி கூட்டத்தில் வட்டி விகிதமும் மாற்றம் செய்யப்படவில்லை. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக ரூபாயின் மதிப்பு சற்று சரிந்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications