நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 86.95 புள்ளிகள் குறைந்து, 49,771.29 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 7.60 புள்ளிகள் குறைந்து, 14,736.40 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1,570 பங்குகள் ஏற்றத்திலும், 1,427 பங்குகள் சரிவிலும், 223 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் இந்திய சந்தைகள் சரிவுடன் முடிவடைந்து இருந்தாலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்து, 72.37 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 72.48 ரூபாயாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே வெள்ளிக்கிழமையன்று இந்திய ரூபாயின் மதிப்பானது 72.51 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
சர்வதேச காரணிகள்
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தையினால், டாலரின் மதிப்பு வலுவாக காணப்படுகிறது. இதனால் பங்கு சந்தைகள் உச்சம் தொட்டன. எனினும் இந்திய பங்கு சந்தையினை பொறுத்தவரையில், இந்த வாரம் எஃப் &ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், நிஃப்டி பிஎஸ்இ, பேங்கி நிஃப்டி, பிஎஸ்இ சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, டிசிஎஸ், டெக் மகேந்திரா, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹெச் டி எஃப் சி வங்கி
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, டிசிஎஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.


Click it and Unblock the Notifications