சென்செக்ஸ் 397 புள்ளிகள் வீழ்ச்சி.. நிஃப்டி 15,000 கீழ் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, சரிவிலேயே முடிவடைந்துள்ளன.

குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 397 புள்ளிகள் குறைந்து, 50 ஆயிரத்து 395 ஆக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 106 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 929 ஆக முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1210 பங்குகள் ஏற்றத்திலும், 1788 பங்குகள் சரிவிலும், 207 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு
 

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் இந்திய சந்தைகள் சரிவுடன் முடிவடைந்து இருந்தாலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா அதிகரித்தது 72.48 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகமாக இருந்ததாலும் சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன.

சர்வதேச காரணிகள்

சர்வதேச காரணிகள்

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தைகள், பணவீக்கத்தினை அதிகரிக்குமே என்ற கவலைகள் எழுந்துள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் கொரோனா ஊக்கத்தொகை குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. ஆக இது இன்னும் பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தையானது ஏற்ற இறக்கத்தில் தான் காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிவிஸ் லேப், ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் பின்செர்வ். கோல் இந்தியா, கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
 

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, ஹெச் சி எல் டெக், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், லார்சன், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: Sensex ends below 50,400, nifty also ends below 15,000

Market update.. opening bell: Sensex falls nearly 700 points, nifty also falls 200 points above
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X