வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய சந்தைகள் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இந்த வாரத்தில் தொடர் ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று காலை தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
இன்று காலை முதல் கொண்டே வலுவான ஏற்றத்துடன் தான் காணப்பட்டது.
எனினும் இன்று அதிகபட்சமாக 51,073.27 புள்ளிகளை தொட்டிருந்தது. குறைந்தபட்சமாக 50,565,.29 புள்ளிகளையும் தொட்டது. இன்றைய உச்சம் தான் இந்த ஆண்டின் புதிய உச்சமாகும். இன்று சந்தை முடிவில் சற்று குறைந்திருந்தாலும், ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது.
இன்று சந்தை நிலவரம்
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 117.34 புள்ளிகள் அதிகரித்து, 50,731.63 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது, இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 28.60 புள்ளிகள் குறைந்து, 14,924.25 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது, இதற்கிடையில் 1281 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1637 பங்குகள் சரிவிலும் 146 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீட்டிலுள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி ஐடி, ஆட்டோ, பிஎஸ்இ, இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஸ்மால் கேப், மிட் கேப், கேப்பிட்டல் கூட்ஸ், ஹெல்த்கேர், ஆயில் & கேஸ், டெக், மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டிபிஸ் லேப், கோடக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ். ஐசிஐசிஐ வங்கி, யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சென்செக்ஸ் குறியீட்டிலுள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள உள்ள எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சென்செக்ஸ் புதிய உச்சம்
இன்று காலை நேர வர்த்தகத்தில் 51,000 தாண்டி வர்த்தகமான சென்செக்ஸ், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என்ற அறிவிப்பு வந்ததையடுத்து சரிவினைக் கண்டுள்ளது. அதோடு புதிய உச்சத்தினைக் கண்ட நிலையில், இன்று வர்த்தக இறுதி நாள் என்பதாலும் சந்தையில் புராபிட் புக்கிங் செய்ததாலும், சந்தை சற்று சரிவடைந்து முடிவடைந்துள்ளது. எனினும் மொத்ததில் சந்தை மைனஸில் செல்லவில்லை என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய ரூபாய்
இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்து 72.92 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து, உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம், வட்டி விகிதம் மாற்றமின்மை என்பன பல காரணிகள் சந்தைக்கு சாதகமாகவே நீண்டகால நோக்கில் உள்ளன.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications