தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 434.93 புள்ளிகள் குறைந்து, 50,889.76 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 137.20 புள்ளிகள் குறைந்து, 14,981.75 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1175 பங்குகள் ஏற்றத்திலும், 1727 பங்குகள் சரிவிலும், 170 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.
இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள குறியீடுகளும் சரிவில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், இந்தஸிந்த் வங்கி, கெயில், ஹெச்யுஎல், டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஹெச்யுஎல், டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ், என்டிபிசி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஓஎன்ஜிசி, எஸ்பிஐ,ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
பலவீனமான சர்வதேச காரணிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் சந்தையானது ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது. எனினும் சர்வதேச அளவில் நிலவி வரும் பலவீனமாக காரணிகள், குறிப்பாக அமெரிக்காவின் வேலை குறித்தான டேட்டா சாதகமாக இல்லாத நிலையில், சந்தைகள் சரிவில் உள்ளன. அதோடு மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும் கிடைத்த லாபத்தினை வார இறுதி வர்த்தக நாள் என்பதால் புராபிட் புக் செய்ததால் சந்தை சரிவில் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications