நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் சரிவில் தொடங்கி, பின் ஏற்றத்தினை கண்டு, முடிவில் சென்செக்ஸ் சரிவிலும், நிஃப்டி மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று அதிகளவு ஏற்ற இறக்கத்தினை கண்டது.
இந்தியாவில் தினசரி கொரோனாவின் தாக்கம் கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், அது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச காரணிகள் சில சந்தைக்கு எதிராகவும் காணப்படுகிறது. அதோடு புராபிட் புக்கிங் காரணமாகவும் இந்த சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று சந்தை தொடக்கத்திலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 135.84 புள்ளிகள் குறைந்து, 51,799.04 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 33.60 புள்ளிகள் குறைந்து, 15,541.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இன்று சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அதிக ஏற்றம் இறக்கம் காணப்பட்டது.
முடிவில் எப்படி?
இதற்கிடையில் முடிவிலும் சற்று குழப்பமான நிலையிலேயே முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 85.40 புள்ளிகள் குறைந்து, 51,849.48 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 1.35 புள்ளிகள் அதிகரித்து, 15,576.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 2,101 பங்குகள் ஏற்றத்திலும், 951 பங்குகள் சரிவிலும், 160 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை பச்சை நிறத்திலும் காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் யுபிஎல், டாடா ஸ்டீல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இந்தஸிந்த் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.20 முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 73.08 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வி; 72.90 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இன்று காலை தொடக்கத்தில் இருந்தே அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், ரூபாயின் மதிப்பும் சரிவில் முடிவடைந்ததுள்ளது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications