நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் இன்று காலையில் ஏற்றத்தில் காணப்பட்டன. எனினும் முடிவில் சென்செக்ஸ் ஏற்றத்திலும், நிஃப்டி சரிவிலும் முடிவடைந்துள்ளது.
இது அதிக ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் சென்செக்ஸ் 41.75 புள்ளிகள் அதிகரித்து, 48,732.55 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.70 புள்ளிகள் குறைந்து, 14,677.80 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 1402 பங்குகள் ஏற்றத்திலும், 1627 பங்குகள் சரிவிலும், 141 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், ஐடிசி, நெஸ்டில், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, நெஸ்டில், லார்சன், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, எம்&எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், எஸ்பிஐ, என்சிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்து 73.29 ரூபாயாக முடிவடைந்துள்ளது.இது இன்று காலையில் 73.42 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வின் முடிவு விலையானது 73.42 ரூபாயாக இருந்தது. இது 73.22 - 72.43 என்ற நிலையில் இருந்தது.
என்ன காரணம்
ஏனெனில் சர்வதேச காராணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையிலும், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் என்பது இரண்டாம் கட்ட பரவலில் இருந்து, மூன்றாம் கட்டத்தினை நோக்கி நகரலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு வார இறுதியாதலால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். வரும் வாரத்திலும் இந்த ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்பதால் முதலீட்டாளார்கள் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications