வாராத்தின் இறுதி வர்த்தக நாளாக இன்றும் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 440.76 புள்ளிகள் குறைந்து, 50,405.32 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 142.65 புள்ளிகள் குறைந்து, 14,938.10 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, கெயில், மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, யுபிஎல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, நெஸ்டில், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் , எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
பலவீனமான சர்வதேச காரணிகளால், அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளது. அதோடு அதிகரித்து வரும் பத்திர லாபத்தின் மத்தியில் பலத்த வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. ஏனெனில் ரிஸ்கியான முதலீடுகளை தவிர்த்து முதலீட்டாளர்கள் நல்ல லாபம் கொடுக்க கூடிய அரசாங்க பத்திரங்களை நாட தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆசிய பங்கு சந்தைகளும் இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்தையும் சரிவில் தொடங்கி சரிவிலேயே முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications