இறுதி வர்த்தக நாளிலும் சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 52,100 மேல் முடிவு..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் இன்று காலையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டன. எனினும் முடிவில் சற்று சரிவில் முடிவடைந்துள்ளன.

குறிப்பாக சென்செக்ஸ் 132.38 புள்ளிகள் குறைந்து, 52,100.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 20.10 புள்ளிகள் குறைந்து, 15,670 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1832 பங்குகள் ஏற்றத்திலும், 1,279 பங்குகள் சரிவிலும், 138 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சற்று சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கிரசிம், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், எஸ்பிஐ, ஹெஸ்டிஎஃப்சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், ஓஎன்ஜிசி, லார்சன், பஜாஜ் பைனான்ஸ், ஹெஸ்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், எஸ்பிஐ, ஹெஸ்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து, 73 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று காலையில் 73.02 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.91 ரூபாயாக இருந்தது. இது 72.95 - 73.12 என்ற நிலையிலேயே இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் என்பது மாற்றம் செய்யப்படவில்லை. அதோடுபொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினையும் குறைத்துள்ளது. மேலும் பணவீக்க விகிதத்திற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளது. அதோடு வார இறுதியாதலால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+