நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் சரிவில் முடிவடைந்துள்ளது.
இது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த இந்திய சந்தையானது, வார இறுதி வர்த்தக நாளான இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்துள்ளதால் சரிவினைக் கண்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் கடந்த சில வாரங்களாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையில் வெளியேறி வந்தாலும், அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது மிக அதிகமாகவே இருந்தது. ஆனால் தற்போது சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றன. இதனால் சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று சரிவில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 394.26 புள்ளிகள் குறைந்து, 58,732.10 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 110 புள்ளிகள் குறைந்து, 17,508.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து முடிவிலும் சரிவிலேயே காணப்பட்டது.
குறிப்பாக சென்செக்ஸ் 360.78 புள்ளிகள் குறைந்து, 58,765.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 86.20 புள்ளிகள் குறைந்து, 17,532.00 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1716 பங்குகள் ஏற்றத்திலும், 1373 பங்குகள் சரிவிலும், 150 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எம்&எம், கோல் இந்தியா, ஐஓசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், மாருதி சுசூகி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட் கார்ப், பவர் கிரிட் கார்ப், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தை முடிவு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 11 பைசா குறைந்து, 74.11 ரூபாயாக காணப்படுகின்றது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 360.78 புள்ளிகள் குறைந்து, 58,765.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 86.1 புள்ளிகள் குறைந்து, 17,532.05 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications