நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் சரிவில் தொடங்கி, முடிவிலும் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் சரிவில் தான் முடிவடைந்துள்ளது.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
இது இன்னும் சற்று குறையலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நிப்டி 17,600 - 17,550 என்ற லெவல் வரையில் வரலாம் என கணித்துள்ளது. சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக உள்ள நிலையில் சந்தையானது இனி வரவிருக்கும் நாட்களில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தை சரிவில் தான் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சரிவிலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 449.72 புள்ளிகள் குறைந்து, 59,217.88 புள்ளிகளாகவும், இதே நிப்டி 121.80 புள்ளிகள் குறைந்து, 17,626.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 647 பங்குகள் ஏற்றத்திலும், 1069 பங்குகள் சரிவிலும், 93 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
முடிவில் எப்படி?
இதற்கிடையில் முடிவிலும் சற்று சரிவிலேயே முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 254.33 புள்ளிகள் குறைந்து, 59,413.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.3 புள்ளிகள் குறைந்து, 17,711.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1463 பங்குகள் ஏற்றத்திலும், 1715 பங்குகள் சரிவிலும், 164 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் என்.டி.பி.சி., கோல் இந்தியா, பவர் கிரிட் கார்ப், சன் பார்மா, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட் ராடெக்சிமெண்ட், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப், சன் பார்மா, எஸ்.பி.ஐ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.04 முடிவடைந்துள்ளது. இது அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தை ஏற்றத்தினை தொடர்ந்து, ரூபாயின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது.
இன்று சந்தையில் புராபிட் புக்கிங் மற்றும் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications