நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று காலையில் பெரியளவில் மாற்றமின்றி சந்தை தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் சற்று ஏற்றத்திலும், நிஃப்டி சற்று சரிவிலும் தொடங்கியது. எனினும் முடிவில் பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 3.33 புள்ளிகள் அதிகரித்து, 53,058.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து, 15,871.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
கடந்த சில அமர்வுகளாக சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதனால் சந்தையில் செல்லிங் அழுத்தம் காணப்பட்டது. இதனையடுத்து தான் இன்று சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
முடிவில் எப்படி?
குறிப்பாக சென்செக்ஸ் முடிவில் 485.82 புள்ளிகள் குறைந்து, 52,568.94 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 151.80 புள்ளிகள் குறைந்து, 15,727.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 1,277 பங்குகள் ஏற்றத்திலும், 1,648 பங்குகள் சரிவிலும், 112 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மெட்டல்ஸ் குறியீடுகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இது தவிர பெரும்பாலான குறியீடுகள் 1% கீழாக சரிவினைக் கண்டுள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் டெக் மகேந்திரா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்.சி.எல் டெக், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ. ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல் டெக், பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், சன் பார்மா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 10 பைசா குறைந்து, 74.71 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இன்று காலையில் 20 பைசா குறைந்து, 74.81 ரூபாயாக தொடங்கியது கவனிக்கதக்கது. இதே முந்தைய அமர்வில் 74.61 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது சந்தையில் செல்லிங் அழுத்தம் காணப்பட்ட நிலையில், ரூபாயும் சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications