நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கி, முடிவில் பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.
பலவீனமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தையானது இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.
அமெரிக்க சந்தைகள் சற்று சரிவினைக் கண்டு வரும் நிலையில், பணவீக்கம் குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இது சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அன்னிய முதலீடுகளும் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சரிவில் சர்வதேச சந்தைகள்
மேலும் இதனை ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையானது, மேலும் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு பங்கு சந்தைகள் சரிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக பல வருடங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டன.
முதலீட்டாளர்கள் கவனம்
இதனையடுத்து முன்னணி பொருளாதார நாடுகளின் மத்திய வங்கிகளானது ,வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தை சற்றி ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சென்செக்ஸ் 88.86 புள்ளிகள் அதிகரித்து, 59,833.74 புள்ளிகளாகவும், இதே நிப்டி 47.20 புள்ளிகள் அதிகரித்து, 17,869.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
எனினும் முடிவில் சென்செக்ஸ் 555.15 புள்ளிகள் குறைந்து, 59,189.73 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 176.30 புள்ளிகள் குறைந்து, 17,646 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 1,291 பங்குகள் ஏற்றத்திலும், 1754 பங்குகள் சரிவிலும், 115 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் கிட்டதட்ட 3% சரிவிலும், பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி ஐடி உள்ளிட்டவை 1% மேலாக சரிவிலும், மற்றவை 1% கீழாக சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, டாடா கன்சியூமர், யுபிஎல், பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹிண்டால்கோ, இந்தஸிந்த் வங்கி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி றுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது ஏப்ரல் 23க்கு பிறகு மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தை ஏற்றத்தினை தொடர்ந்து, ரூபாயின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications