நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடக்கத்திலேயே சற்று சரிவில் தான் தொடங்கின. இதனையடுத்து முடிவிலும் சரிவில் தான் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக சென்செக்ஸ் 562.34 புள்ளிகள் குறைந்து, 49,801.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 189.15 புள்ளிகள் குறைந்து, 14,721.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 818 பங்குகள் ஏற்றத்திலும், இதே 2115 பங்குகள் சரிவிலும், 138 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
பெரும்பாலான குறியீடுகள் சரிவு
குறிப்பாக பிஎஸ்இ கேப் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ் 2% மேலாக சரிவினைக் கண்டுள்ளன. இதே பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடு 3.22% ஆகவும், இதே நிஃப்டி பிஎஸ்இ 3.13% ஆகவும் காணப்படுகின்றன. இதே பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ஐடி, நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% கீழாகவும், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப் பங்குகள் 2% மேலாகவும் சரிவினைக் கண்டுள்ளன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் ஐடிசி, இன்ஃபோசிஸ், ஹெச் டி எஃப் சி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஒ என் ஜி சி, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், , இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஒஎன்ஜிசி, என்டிபிசி, சன் பார்மா, எஸ்பிஐ, இந்தஸிந்த் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.58 ரூபாயாக தொடங்கிய நிலையில், முடிவில் 72.54 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து இந்திய சந்தைகள் இருக்கும் என்பதால், இந்திய சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை நிறுத்தியுள்ளனர். இதனால் ரூபாயின் மதிப்பும் பெரியளவில் மாற்றமில்லை. அதோடு பங்கு சந்தைகளும் சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
இதுவும் ஒரு காரணம்
மேலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கங்கள், அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டம், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை சந்தைக்கு எதிர்மறையாக உள்ளன. இந்திய சந்தை மட்டும் அல்ல, பல்வேறு சர்வதேச சந்தைகளும் எதிர்மறையாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் இன்று நடக்கவுள்ள ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டியை பொறுத்து இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications