இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..!

வாராத்தின் நான்காவது வர்த்தக நாளாக இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் கிட்டதட்ட 600 புள்ளிகள் சரிந்துள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 598.57 புள்ளிகள் குறைந்து, 50,846.08 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 164.80 புள்ளிகள் குறைந்து, 15,080.80 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1,580 பங்குகள் ஏற்றத்திலும், 1350 பங்குகள் சரிவிலும், 183 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.

இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..!

இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் முடிவடைந்துள்ளன.

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், கிரசிம், டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல்ஸ், ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், மாருதி சுசூகி, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பின்செர்வ், லார்சன், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 53 பைசா அதிகரித்து 72.83 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பலவீனமான சர்வதேச காரணிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால், சர்வதேச சந்தைகள் இறக்கத்தில் காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தையும் சரிவில் காணப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் அதிகரித்து வரும் பத்திர லாபம், மற்ற முதலீடுகளில் இருந்து முதலீட்டாளர்களை வெளியேற தூண்டுகிறது. இதன் காரணமாக சந்தையில் செல்லிங் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக சந்தை சரிவினை நோக்கில் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+