இந்திய பங்கு சந்தையானது இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய நிலையில் முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தது. குறிப்பாக சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டுள்ள நிலையில், இன்று சென்செக்ஸ் 671.15 புள்ளிகள் அல்லது 1.12% சரிவினைக் கண்டு, 59,135.13 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதே நிஃப்டி 176.70 புள்ளிகள் குறைந்து அல்லது 1% குறைந்து, 17,412.90 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1404 பங்குகள் ஏற்றம் கண்டும், 2021 பங்குகள் சரிவினைக் கண்டும், 102 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பானது 82.05 ரூபாயாக சரிவில் முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 81.98 ரூபாயாகவும் முடிவுற்று இருந்தது.
இது இந்திய சந்தையானது சரிவில் காணப்பட்ட நிலையில் ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. டாலரின் மதிப்பும் 3 மாத உச்சத்தில் இருந்து சற்றே சரிவினைக் கண்டுள்ள நிலையில், அது மேற்கோண்டு ரூபாயில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவின் வேலையில்லா நலன் குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வந்த நிலையில் சரிவினைக் கண்டுள்ளது.
அழுத்தத்தினை ஏற்படுத்தும் காரணிகள்
சர்வதேச சந்தையிலும் அழுத்தம் காணப்படும் நிலையிலும், இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பத்திர சந்தையும் சரிவில் காணப்படும் நிலையில், எண்ணெய் விலையும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
1500 புள்ளிகளுக்கு மேல் சரிவு
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்திய பங்கு சந்தையானது கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் வியாழக்கிழமை அன்று 920 புள்ளிகள் குறைந்து, 59,806 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே இன்றும் 671 புள்ளிகள் சரிந்து, 59,135.13 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. ஆக மொத்தம் 2 நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1591 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது.
புராபிட் புக்கிங்
அமெரிக்காவின் வேலையின்மை தரவு, பண்ணை அல்லாத வேலை தரவு, டாலர் மதிப்பு, பத்திர சந்தை என பல காரணிகளும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது. இதே இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், புராபிட் புக்கிங் என்பதும் இருந்த நிலையில் சந்தையானது சரிவினைக் கண்டும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications