நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சற்று சரிவில் தான் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக தொடக்கத்தில் சென்செக்ஸ் 456.06 புள்ளிகள் குறைந்து, 59,519.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132 புள்ளிகள் குறைந்து, 17,725.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து முடிவிலும் சென்செக்ஸ் 677.77 புள்ளிகள் குறைந்து, 59,306.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 185.60 புள்ளிகள் குறைந்து, 17,671.65 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே 1,326 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1,836 பங்குகள் சரிவிலும், 157 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகளும் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும் சரிவில் முடிவடைந்துள்ளது. இதே மற்ற குறியீடுகள் 1% கீழாக சரிவிலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி டாப் கெயினர்ஸ்
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, என் டி பி சி, கோடக் மகேந்திரா, இந்தஸ்இந்த் வங்கி, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் டாப் கெயினர்ஸ்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, என்டிபிசி, இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் இன்று ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் பலமான ஏற்ற, இறக்கத்தினை கண்டுள்ளது.
இதுவும் ஒரு முக்கிய காரணம்
மார்கன் ஸ்டான்லி அறிக்கையானது மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய ஈக்விட்டிகளின் தரத்தினை overweight என்ற நிலையில் இருந்து equal-weight என்று குறைத்துள்ளது. இது சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் சந்தையானது தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
More From GoodReturns

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications