நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 882 புள்ளிகள் குறைந்து, 47,949.42 ஆக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 258.40 புள்ளிகள் குறைந்து 14,359.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 723 பங்குகள் ஏற்றத்திலும், 2091 பங்குகள் சரிவிலும், 157 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில்அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 52 பைசா குறைந்து, 74.87 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று காலையில் 43 பைசா குறைந்து, 74.78 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் முடிவு விலையானது 74.35 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
சர்வதேச காரணிகள்
தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தேவை குறையும். இதனால் பொருளாதாரம் சரிவினைக் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா, போக்குவரத்து, ஹாஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல்கள் பாதிக்கப்படலாம். தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்குமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தேவை குறையும். இதனால் பொருளாதாரம் சரிவினைக் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா, போக்குவரத்து, ஹாஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல்கள் பாதிக்கப்படலாம்.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டிஸ், பிரிட்டானியா, சிப்லா, விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டிஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, பவர் கிரிட் கார்ப், ஓஎன்ஜிசி, இந்தஸிந்த் வங்கி, கோடக் மகேந்திரா, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.


Click it and Unblock the Notifications