இரத்தகளறியான பங்கு சந்தை.. 889 புள்ளிகளை காலி செய்த சென்செக்ஸ்..!

இன்று காலையிலேயே பலத்த சரிவில் தொடங்கிய இந்திய சந்தையானது. முடிவிலும் பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

இது வார இறுதியாதலால் புராபிக்ட் புக்கிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சென்செக்ஸ் 889.00 புள்ளிகள் குறைந்து, 57,011.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 263.20 புள்ளிகள் குறைந்து, 16,985.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 913 பங்குகள் ஏற்றத்திலும், 2221 பங்குகள் சரிவிலும், 76 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

இது ஓமிக்ரான் அச்சம், மத்திய வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்பு, பணவீக்கம் என பல்வேறு சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. அதிலும் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம் என்ற நிலையில் சந்தையானது பலத்த சரிவில் முடிவடைந்துள்ளது.

வெளியேறும் முதலீடுகள்

வெளியேறும் முதலீடுகள்

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வரும் நிலையில், இன்று வார இறுதி என்பதால் சற்று கூடுதலாகவே முதலீடுகள் வெளியேறியுள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த போக்கு வரும் வாரத்தில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தொடக்கம்

இன்றைய தொடக்கம்

இன்று காலை தொடக்கத்தில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 41.45 புள்ளிகள் குறைந்து, 57,859.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10.70 புள்ளிகள் குறைந்து, 17,237.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதற்கிடையில் 1,076 பங்குகள் ஏற்றத்திலும், 786 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றாமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்கள் நிலவரம்

இன்டெக்ஸ்கள் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி மெட்டல்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ்,பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி பி எஸ் இ, மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன.

 

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ,இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல். டெக், பவர் கிரிட் கார்ப், சன் பார்மா உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஓ என் ஜி சி, கோடக் மகேந்திரா, ஹெச்,யு.எல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், பவர் கிரிட் கார்ப், சன் பார்மா டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, கோடக் மகேந்திரா,ஹெச்,யு.எல், டைட்டன் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

வார கேண்டில் பேட்டர்ன்

வார கேண்டில் பேட்டர்ன்

வார கேண்டில் பேட்டர்னில் நிஃப்டி கிட்டதட்ட செல்லிங் பேட்டர்னுக்கு அருகில் காணப்படுகின்றது. மேலும் நிஃப்டி அதன் முக்கிய சம்போர்ட்டான 17,000 புள்ளிகளையும் உடைத்துக் காட்டியுள்ளது. இனி வரும் வர்த்தக அமர்வுகளில் இதற்கு கீழாகவும் உடைத்தால் சற்று குறையலாம் எனலாம். அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 16,900 - 16,800 புள்ளிகளாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+