நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1707.94 புள்ளிகள் குறைந்து, 47,883.38 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 524.05 புள்ளிகள் குறைந்து 14,310.80 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் 493 பங்குகள் ஏற்றத்திலும், 2433 பங்குகள் சரிவிலும், 171 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 31 பைசா குறைந்து, 75.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகமாக இருந்ததாலும். மஹாராஷ்டிரா அரசு லாக்டவுனை பரிசீலனை செய்வதாகவும் கூறிய நிலையில், சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ மிட்கேப், நிஃப்டி ஆட்டோ, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 5% மேலாக வீழ்ச்சி கண்டுள்ளன. இதே பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 4% மேலாகவும், பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி 3% கீழாகவும் சரிவினைக் கண்டு வருகின்றது.
Array
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சிப்லா, டிவிஎஸ் லேப்ஸ், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் டாப் கெயினராகவும், இதே இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்?
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையில், சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக சந்தை பெரும் சரிவினைக் கண்டுள்ளது. அதிலும் மஹாராஷ்டிரா அரசு முழு லாக்டவுனுக்கு பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி மாநிலமான மஹாராஷ்டிராவில் லாக்டவுன் கடுமையாக்கப்பட்டால், அது பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குகள் விற்பனை
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் கைகளில் உள்ள வங்கி பங்குகள் மற்றும் நிதி பங்குகளை விற்க தொடங்கியுள்லனர், இதன் காரணமாக பேங்க் நிஃப்டி 5% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. ஏனெனில் மீண்டும் லாக்டவுன் கடுமையாக்கப்பட்டால், மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது கடினமாகும் என்ற கவலை எழுந்துள்ளது. இதனால் தனியார் வங்கிகள் கூட 4 - 8% வீழ்ச்சி கண்டுள்ளன. இதே எஸ்பிஐ, பிஓபி, ஐஓபி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கி பங்குகள் 6 - 8% வீழ்ச்சி கண்டுள்ளன.
சர்வதேச காரணிகள்
ஆசிய சந்தைகள் பலவும் இன்று அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன. இதே அமெரிக்க பத்திர சந்தையானது வலுவடைந்துள்ள நிலையில், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. அதோடு சில்லறை விற்பனையும் பாதிக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.
தடுப்பூசி பற்றாக்குறை
இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சந்தைகள் சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக மும்பையில் பல ஹாஸ்பிட்டல்களில் தடுப்பூசி போடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications