ஒரே நாளில் சென்செக்ஸ்.கிட்டதட்ட 2000 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 14,500 மேல் முடிவு..!

நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று காலையிலேயே இந்திய சந்தைகள் பலத்த சரிவில் தான் தொடங்கின.

இதனையடுத்து முடிவிலும் சரிவில் தான் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 1939.32 புள்ளிகள் குறைந்து, 49,099.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 568.20 புள்ளிகள் குறைந்து, 14,529.15 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.

இது வார இறுதியில், மாத இறுதி வர்த்தக நாளான இன்று சந்தை பலத்த சரிவிலேயே முடிவடைந்துள்ளது.

Array

Array

இதற்கிடையில் பேங்க் நிஃப்டி கிட்டதட்ட 5% வீழ்ச்சியும், பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடுகள் கிட்டதட்ட 4% சரிவிலும் காணப்படுகின்றன, இதே நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 3% அல்லது 3% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஸ்மால் கேப் பங்குகள் 2% வரையிலும் வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன.

என்ன காரணம்

என்ன காரணம்

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதிகலாபம் தரும் முதலீட்டிற்காக, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களின் கையில் உள்ள ஆர்டர்களை விற்க தூண்டுகிறது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ல முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை விற்க முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக சந்தை தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இன்று ஜிடிபி

இன்று ஜிடிபி

இன்று இந்தியாவின் மூன்றாவது காலாண்டு ஜிடிபி விகிதம் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகள் சாதகமாக வந்து கொண்டிருந்தாலும், புதிய வகை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளது.

Array

Array

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் ஓஎன்ஜிசி, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், எம் & எம், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன. இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, எம்&எம், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

முந்தைய அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன. இதனால் இந்திய சந்தைகளும் சரிவில் முடிவடைந்துள்ளன.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+