கரடியின் பிடியில் சிக்கிய காளை.. சென்செக்ஸ் கிட்டதட்ட 500 சரிவு..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் இன்று காலையில் ஏற்றத்தில் காணப்பட்டன. எனினும் முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளது.

குறிப்பாக சென்செக்ஸ் 487.43 புள்ளிகள் குறைந்து, 50,792.08 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 143.80 புள்ளிகள் குறைந்து, 15,031 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1335 பங்குகள் ஏற்றத்திலும், 1626 பங்குகள் சரிவிலும், 174 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், ஐஓசி, பவர் கிரிட் கார்ப், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெஸ்டிஎஃப்சி லைஃப், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டைட்டன் நிறுவனம், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்து 72.81 ரூபாயாக முடிவடைந்துள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.91 ரூபாயாக இருந்தது. இது 72.62 - 72.85 என்ற நிலையில் இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஏனெனில் சர்வதேச காராணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. அதோடு வார இறுதியாதலால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். வரும் வாரத்திலும் இந்த ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்பதால் முதலீட்டாளார்கள் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+