நடப்பு வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568.38 புள்ளிகள் அதிகரித்து, 49,008.50 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 182.40 புள்ளிகள் அதிகரித்து, 14,507.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1633 பங்குகள் ஏற்றத்திலும், 1283 பங்குகள் சரிவிலும், 167 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 11 பைசா அதிகரித்து, 72.51 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்து, 72.52 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வில் 72.62 ரூபாயாக முடிவடைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், டாடா பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, ஐடிசி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில், பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளது. குறிப்பாக டாலரின் மதிப்பு, அதிகரித்து வரும் பத்திர லாபம் என சர்வதேச காரணிகள், சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications