சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் முடிவு.. நிஃப்டியின் நிலவரம் என்ன?

மும்பை: சர்வதேச பங்கு சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தாலும், இந்திய பங்கு சந்தையானது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தற்போது விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் பற்பல பங்குகளும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.

இன்று காலை அமர்வில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்பட்ட சந்தையானது, முடிவில் சென்செக்ஸ் 684.64 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 57,919.97 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 171.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,185.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

ரூ.4 லட்சம் கோடி வருமானம்

ரூ.4 லட்சம் கோடி வருமானம்

இதற்கிடையில் முதலீட்டாளார்களின் சந்தை மதிப்பானது 4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்இ-யில் பட்டியலிட்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பானது 273.82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த சில அமர்வுகளாக சர்வதேச சந்தைகள் தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

அதிலும் அமெரிக்க பணவீக்க தரவானது மேற்கொண்டு அதிகரித்துள்ள நிலையிலும் கூட, பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.

இதனையடுத்து தான் இந்திய பங்கு சந்தையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாகவே சந்தையில் செல்லிங் பிரஷர் இருந்த நிலையில், தற்போது புராபிட் புக்கிங் காரணமாகவும் இந்த ஏற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலையும் ஏற்றம்

கச்சா எண்ணெய் விலையும் ஏற்றம்

கச்சா எண்ணெய் விலையானது கடந்த வாரத்தினை காட்டிலும், நடப்பு வாரத்தில் சரிவில் காணப்படுகின்றது. இது சர்வதேச அளவில் ரெசசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், தேவை சரியலாம் எனம் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவில் காணப்படுகின்றது. டாலரின் மதிப்பு ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதுவே சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.

டெக்னிக்கல் காரணிகள்

டெக்னிக்கல் காரணிகள்

நடப்பு வாரத்தில் இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ மற்றும் மைண்ட் ட்ரீ உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தவிர இன்னும் பல நிறுவனங்கள் காலாண்டு முடிவினை வெளியிட்டு வருகின்றன. இதுவும் சந்தையில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+