மும்பை:இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. சென்செக்ஸ் 445.73 புள்ளிகள் அல்லது 0.77% ஏற்றம் கண்டு, 58,074.68 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. நிஃப்டி 50 119.10 புள்ளிகள் அல்லது 0.70% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டு, 17,107.50 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று 9 பைசா அதிகரித்து, 82.54 ரூபாயாக சற்றே உயர்ந்து காணப்பட்டது. இதே முடிவில் 82.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது வரவிருக்கும் நாட்களில் சந்தையில் இன்னும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பங்கு சந்தையிலும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறியீடுகள்
இன்று சந்தையில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளன. எனினும் பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ, நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதே பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.யு.எல், பவர் கிரிட் கார்ப், பிரிட்டானியா, டெக் மகேந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஹெச்.யு.எல், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
முக்கிய காரணிகள்
அமெரிக்காவின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை உயர்த்தலாம். இது இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரவிருக்கும் நாட்களில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்னிய முதலீடுகள் வரத்து என்பதும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications