39000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..! நிலை கொண்ட நிஃப்டி..!

கடந்த இரண்டு வர்த்தக நாளில் மட்டும் சென்செக்ஸ் சந்தை சுமாராக 3000 புள்ளிகள் ஏற்றம் கண்டது. நிதி அமைச்சர் சொன்ன கார்ப்பரேட் வரி செய்திக்கான மொமெண்டம் முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. இன்று சென்செக்ஸ் வெறும் 7 புள்ளிகள் தான் ஏற்றம் கண்டது. அதே போல நிஃப்டி 11 புள்ளிகள் இறக்கம் கண்டது. எனவே செய்திக்கான மொமெண்டம் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அதோடு சந்தை சார்ந்த செய்திகள் எதுவும் பெரிய நன்மை தரக் கூடியதாகவோ, மொமெண்டம் கொண்டதாகவோ இல்லை. எனவே சந்தை இன்று மந்தமாகவே வர்த்தகமானது. எனவே நாளையும் இதே நிலை தொடரலாம் என்றே அனலிஸ்டுகள் சொல்கிறார்கள்.

ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் 39,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாகத் இருக்கும். இந்த ரெசிஸ்டென்ஸ் தாண்டுவதே பெரிய விஷயம் தான். எனவே முதலில் சென்க்செக்ஸ் இந்த ரெசிஸ்டென்ஸை உடைக்கப்படும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,800 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின் 38,500 புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம்.

39000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..! நிலை கொண்ட நிஃப்டி..!

நேற்று மாலை சென்செக்ஸ் 39,090 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 39,135 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,097 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 7 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் நேற்று மாலை 11,600 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 11,590 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,588 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 12 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,695 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,186 பங்குகள் ஏற்றத்திலும், 1,363 பங்குகள் இறக்கத்திலும், 147 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,695 பங்குகளில் 69 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 110 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. மெட்டல், பேங்க், பொதுத் துறை வங்கிகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. ஐடி துறை சார் இண்டெக்ஸ் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், ஜி எண்டர்டெயிமெண்ட், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி பேங்க், பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஈஷர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, லார்சன், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.99-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை 63.03 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+